ADDED : ஜூன் 23, 2024 03:51 AM
காரைக்குடி: கடந்த சில தினங்களுக்குகாரைக்குடி போக்குவரத்து நகரை சேர்ந்த சிந்து 32, என்பவர் வீட்டை பூட்டிவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 2 பவுன் தங்கத்தோடு, வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.50 ஆயிரம் திருடு போய்இருந்தது.
* சந்தைப்பேட்டையை சேர்ந்த ராஜன் 67. வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த ஒன்றரை பவுன் தங்க நகை, வெள்ளிப் பொருட்கள் ரூ.60 ஆயிரம் திருடு போயிருந்தது.
*காரைக்குடி ரயில்வே ரோடு இந்திரா நகர் புதுத்தெருவை சேர்ந்த பாமா 70, என்பவரது வீட்டின்பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரம், ஒன்றரை பவுன் தங்கநகையை யாரோ திருடி சென்றுள்ளனர். தொடர் திருட்டு சம்பவத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.