ADDED : ஆக 05, 2024 10:00 PM
தேவகோட்டை, - தேவகோட்டை, விருதுநகர் ரோட்டரி சங்கங்கள் இணைந்து ஆனந்தா கல்லூரியில் யாதுமானவள் தன்னம்பிக்கை பயிற்சி கருத்தரங்கை நடத்தினர்.
கல்லூரி செயலாளர் செபாஸ்டியன் தலைமை வகித்தார். தேவகோட்டை ரோட்டரி தலைவர் மனோகரன் வரவேற்றார். முதல்வர் ஜான் வசந்த் குமார் பேசினார். யாதுமானவள் ஒருங்கிணைப்பாளர் தன்னம்பிக்கை பேச்சாளர் ஜெயந்தாஸ்ரீ, பெண்கள் பிரிவு முதன்மையர் திருமாமகள், பேராசிரியர் எலிசபெத் ராணி பேசினர். தேவகோட்டை, விருதுநகர் ரோட்டரி சங்க நிர்வாகிகள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.