ADDED : ஜூலை 28, 2024 07:02 AM
சிவகங்கை : பால முருகன் நர்சரிபிரைமரி பள்ளியில் அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடந்தது.
ஆசிரியர் நிலா வரவேற்றார். சாஸ்தா சுந்தரம்தலைமை வகித்தார். நிர்வாகி குமார் முன்னிலை வகித்தார். தமிழ்ச் சங்கத் தலைவர் அன்புத்துரை, தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் முத்துக்கிருஷ்ணன், இளங்கோ கலந்துகொண்டனர்.
சிவகங்கை தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்க மாவட்ட பொருளாளர் பிச்சை மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். ஆசிரியர் புவனேஸ்வரி நன்றி கூறினார்.
பாலமந்திர் நர்சரிபிரைமரி பள்ளியில் நடந்த விழாவில் ஆசிரியர் கோமதிபாலா வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். தமிழ்ச்சங்க நிறுவனத் தலைவர் ஜவஹர் கிருஷ்ணன், தமிழ்ச்சங்க உறுப்பினர் யுவராஜ், குமரேசன் கலந்துகொண்டனர். மணவாளன் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். ஆசிரியர் மதிவாணி நன்றி கூறினார்.