Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மின் கட்டண உயர்வு எதிரொலி சைக்கிளுக்கு காற்றடிக்க ரூ.10

மின் கட்டண உயர்வு எதிரொலி சைக்கிளுக்கு காற்றடிக்க ரூ.10

மின் கட்டண உயர்வு எதிரொலி சைக்கிளுக்கு காற்றடிக்க ரூ.10

மின் கட்டண உயர்வு எதிரொலி சைக்கிளுக்கு காற்றடிக்க ரூ.10

ADDED : ஜூலை 27, 2024 05:05 AM


Google News
Latest Tamil News
மானாமதுரை, : தமிழகத்தில் மின் கட்டண உயர்வு எதிரொலியாக சைக்கிளுக்கு காற்றடிக்க ரூ.10 , டூவீலருக்கு ரூ.20ஆக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தி.மு.க.,ஆட்சி பொறுப்பேற்று தற்போது 3வது முறையாக மின் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வை காரணம் காட்டி அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. மாணவர்கள் மற்றும் கிராமப்புற மக்கள் பயன்படுத்தும் சைக்கிளுக்கு காற்றடிக்க கூட ரூ.10 வசூலிக்கப்படுகிறது. டூவீலர்களுக்கு ரூ.20 ஆகவும்,ஆட்டோ, சிறிய ரக சரக்கு வாகனங்களுக்கு ரூ.30 ஆகவும்,கார்களுக்கு ரூ.40 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

மானாமதுரை பகுதி மாணவர்கள் கூறியதாவது:

தமிழக அரசு வழங்கிய விலையில்லா சைக்கிள்களில் கிராமங்களில் இருந்து நகர் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வரும் நிலையில் எங்களது சைக்கிள்களில் அடிக்கடி காற்று இறங்கி விடுவதால் கடைகளுக்கு கொண்டு சென்று காற்று நிரப்பினால் முன்பு ரூ.5 பெற்றனர். தற்போது மின் கட்டண உயர்வு காரணமாக ரூ.10 வசூலிப்பதால் சிரமப்பட்டு வருகிறோம் என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us