/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ டிபாசிட் தொகை தர மறுப்பு; செயல் அலுவலர் மீது புகார் டிபாசிட் தொகை தர மறுப்பு; செயல் அலுவலர் மீது புகார்
டிபாசிட் தொகை தர மறுப்பு; செயல் அலுவலர் மீது புகார்
டிபாசிட் தொகை தர மறுப்பு; செயல் அலுவலர் மீது புகார்
டிபாசிட் தொகை தர மறுப்பு; செயல் அலுவலர் மீது புகார்
ADDED : மார் 12, 2025 01:00 AM
காரைக்குடி; சிவகங்கை மாவட்டம் புதுவயல் பேரூராட்சியில், நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி செலவில் மித்ராவயல் - சிங்காரத்தோப்பு சாலைப்பணி 2021ல் நடந்தது.
டிபாசிட் தொகையாக ஒப்பந்ததாரரிடம் ரூ. 5 லட்சம் பிடித்தம் செய்யப்பட்டது. பணி முடிந்து 3 ஆண்டுகளாகியும் டிபாசிட் தொகையை முழுமையாக திருப்பித் தராமல் செயல் அலுவலர் இழுத்தடிப்பு செய்வதோடு லஞ்சம் கேட்பதாக ஒப்பந்ததாரர் புகார் கூறுகிறார்.
ஒப்பந்ததாரர் பாண்டி கூறுகையில்: 2020 ல் மித்ராவயல் - சிங்காரத்தோப்பு சாலை பணிக்காக டெண்டர் விடப்பட்டது. ரூ.1 கோடி மதிப்பிலான இச்சாலை பணி 2021ல் முடிக்கப்பட்டது. பணி முடிந்தும் டிபாசிட் தொகை ரூ.5 லட்சத்தை திரும்ப தரவில்லை.
செயல் அலுவலர் உமா மகேஸ்வரன், டிபாசிட் தொகையை தர மறுப்பதோடு 10 சதவீதம் வரை லஞ்சமாக எதிர்பார்க்கிறார். பேரூராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள்தர வலியுறுத்தியும் டிபாசிட் தொகையை வழங்க மறுக்கிறார். அக்டோபரில் டிபாசிட் தொகையில் ரூ. ஒன்றரை லட்சம் தந்தவர், மீதி தொகை கேட்டால் ஆடிட்டிங் பிரச்னை இருப்பதாக தெரிவிக்கிறார்.
செயல் அலுவலர் உமா மகேஸ்வரன் கூறுகையில்; 2021-- 22ல் பணி நடந்துள்ளது. 2024 ல் தான் டிபாசிட் குறித்து தெரிவித்தார். 3 வருடம் ஆகிவிட்டால் காலம் கடந்த டிபாசிட் ஆகிவிடும். மீண்டும் கூட்டத்தில் தீர்மானம் வைத்து தான் வழங்க வேண்டும். ஆடிட்டிங் ஆட்சேபனை இல்லாத தொகை வழங்கப்பட்டுள்ளது. பாக்கி தொகை, ஆடிட்டிங் ஆட்சேபனை பார்த்துவிட்டு தருவோம். நான் கமிஷன் எதிர்பார்க்கவில்லை என்றார்.