/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ரணசிங்கபுரம் --- காட்டாம்பூர் ரோடு மேம்படுத்த வேண்டும் ரணசிங்கபுரம் --- காட்டாம்பூர் ரோடு மேம்படுத்த வேண்டும்
ரணசிங்கபுரம் --- காட்டாம்பூர் ரோடு மேம்படுத்த வேண்டும்
ரணசிங்கபுரம் --- காட்டாம்பூர் ரோடு மேம்படுத்த வேண்டும்
ரணசிங்கபுரம் --- காட்டாம்பூர் ரோடு மேம்படுத்த வேண்டும்
ADDED : ஜூலை 15, 2024 04:25 AM

திருப்புத்தூர், : திருப்புத்தூர் அருகே ரணசிங்கபுரம் -- புதுக் காட்டாம்பூர் இணைப்பு ரோட்டை மேம்படுத்த கிராமத்தினர் கோரியுள்ளனர்.
நான்கு கி.மீ. நீளமுள்ள இந்த இணைப்பு ரோடு சிங்கிள் ரோடாக உள்ளது. இந்த ரோட்டிலிருந்து விலக்கு ரோடாக ரணசிங்கபுரம், தேவரம்பூர், காட்டாம்பூர் கிராமத்தினரின் குடியிருப்புகளின் தெருச்சாலைகள் இப்பகுதியில் உள்ளது. நெடுஞ்சாலை பராமரிப்பில் உள்ள ரோடு போடப்பட்டு 15 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. இதனால் ஆங்காங்கே விபத்து ஏற்படுத்தும் பள்ளங்கள் உள்ளன.
இதனால் இந்த ரோடை பராமரிக்குமாறு குடியிருப்பு வாசிகள் கோரியுள்ளனர்.
மேலும் மதுரை -- சிவகங்கை ரோடுகளை இணைக்கும் ரோடுகள் என்பதால் இருவழிச்சாலையி சாலையாக மேம்படுத்தவும் இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.
இதனால் இப்பகுதியில் குடியிருப்புகள் அதிகரித்து வருவதால் போக்குவரத்து வசதியும் அதிகரிக்கும்.
பஸ் போக்குவரத்தும் அதிகரிக்கும என்று நம்புகின்றனர். நெடுஞ்சாலைத்துறையினர் இந்த ரோட்டை ஆய்வு செய்து தேவையான அளவில் விரிவாக்கம் செய்ய வேண்டியது அவசியமாகும்.