/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மூன்று ரோடு சந்திப்பில் தேங்கும் மழைநீர் மூன்று ரோடு சந்திப்பில் தேங்கும் மழைநீர்
மூன்று ரோடு சந்திப்பில் தேங்கும் மழைநீர்
மூன்று ரோடு சந்திப்பில் தேங்கும் மழைநீர்
மூன்று ரோடு சந்திப்பில் தேங்கும் மழைநீர்
ADDED : ஜூன் 11, 2024 07:27 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் தேரோடும் வீதி, கண்டரமாணிக்கம் ரோடு, அஞ்சலக ரோடு சந்திப்பில் மழை நீர் தேங்குவதைத் தவிர்க்க போதிய வடிகால் வசதி ஏற்படுத்த மக்கள் கோரியுள்ளனர்.
திருப்புத்துார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் போஸ்டாபீஸ் ரோடு, காரைக்குடி,கண்டரமாணிக்கம் ரோடு சந்திப்பு உள்ளது. அப்பகுதியில் உள்ள வடிகால் மூலம் நகரின் அனைத்து வடிகால்களிலிருந்தும் வரும் கழிவுநீர் அட்டக்குளம் செல்கிறது. தற்போது இந்த வடிகால் போதிய பராமரிப்பில்லாமல் உள்ளது. மழை பெய்யும்போது விரைவாக நீர் செல்ல முடியாமல் நீர் தேங்கி போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.
தற்போது அனைத்து ரோடுகளும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. லேசான மழைக்கே மண்ணில் நீர் உறிஞ்ச வழியின்றி ரோட்டில் தேங்கி விடுகிறது. அஞ்சலக வீதி சந்திப்பில் வடிகால் வசதியை மேம்படுத்த பொதுமக்கள் கோரியுள்ளனர்.