ADDED : மார் 12, 2025 12:56 AM
தேவகோட்டை; தேவகோட்டையில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து காற்றுடன் மழை பெய்தது. காற்றில் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்தன. மின் தடை செய்யப்பட்டது.
திருப்பாக்கோட்டை விவசாயி திருநாவுக்கரசு கூறுகையில், அறுவடை முடிந்து வயல் வறண்டு இருக்கும் நிலையில் இந்த கோடை மழை உதவியால் வயலை பக்குவபடுத்த முடியும்.
மாசி மழை நல்லது தான். இன்னும் மழையும் பெய்யும் நிலையில் கோடை விவசாயம் செய்யலாம். நெல் மட்டுமின்றி வேறு விவசாயமும் செய்யலாம் என்றார்.