ADDED : ஜூலை 13, 2024 05:17 AM
திருப்புத்துார் : திருப்புத்துார் தென்மாப்பட்டு ஆதீனமிளகி அய்யனார் கோயில் புரவி எடுப்பு கொட்டும் மழையில் நடந்தது.
கடந்த வாரம் சேங்கை வெட்டு, பிடிமண் கொடுத்தல் நடந்தது. நேற்று புதுப்பட்டி சூளையிலிருந்து புரவிகள் எடுப்பு நடந்தது. மாலை 5:00 மணி முதல் பலத்த மழை பெய்ததால் இரவில் மழைத் துாறலில் கிராமத்தினர் சின்னையா சுவாமி கோயிலில் சாமி அழைப்பிற்கு பின்னர், புதுப்பட்டி சென்று புரவிகளை எடுத்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் தென்மாப்பட்டு புரவி பொட்டலில் சேர்த்து புரவிகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.