/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பழைய எம்.ஆர்.ஐ., ஸ்கேன் மாற்ற பொதுமக்கள் கோரிக்கை பழைய எம்.ஆர்.ஐ., ஸ்கேன் மாற்ற பொதுமக்கள் கோரிக்கை
பழைய எம்.ஆர்.ஐ., ஸ்கேன் மாற்ற பொதுமக்கள் கோரிக்கை
பழைய எம்.ஆர்.ஐ., ஸ்கேன் மாற்ற பொதுமக்கள் கோரிக்கை
பழைய எம்.ஆர்.ஐ., ஸ்கேன் மாற்ற பொதுமக்கள் கோரிக்கை
ADDED : ஜூன் 04, 2024 11:57 PM
சிவகங்கை : சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தொடர்ந்து பழுதாகி வரும் பழைய எம்ஆர்ஐ ஸ்கேனை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தனியார் நிறுவனம் சார்பில் எம்ஆர்ஐ ஸ்கேன் இயங்கி வருகிறது.
இங்கு முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இலவசமாகவும், மற்றவர்களுக்கு ரூபாய் 2,300க்கும் ஸ்கேன் எடுக்கப்படுகிறது. கடந்த மாதத்தில் மட்டும் மூன்று முறைக்கு மேல் எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரம் பழுதானது.
அவசரத்திற்கு ஸ்கேன் எடுக்க முடியாமல் நோயாளிகள் சிரமப்பட்டனர். கடந்த மே மாதத்தில் மட்டும் மே 3ம் தேதி பழுதான இயந்திரத்தை மே 6ம் தேதி சரி செய்தனர்.
மீண்டும் மே 7ம் தேதி பழுதானதை 8ம் தேதி சரி செய்தனர். மே 24ம் தேதி பழுதானதை மே 25ம் தேதி சரி செய்தனர். அடுத்து 27 ம் தேதி பழுதானதை 31ம் தேதி சரி செய்தனர். தொடர்ந்து கடந்த மாதத்தில் இயந்திரம் அடிக்கடி பழுதானதால் ஸ்கேன் எடுப்பதற்காக காத்திருந்த நோயாளிகள் மதுரைக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.
அடிக்கடி பழுதாகும் பழைய ஸ்கேன் இயந்திரத்தை மாற்றி புதிய ஸ்கேன் இயந்திரம் வைக்க மருத்துவ கல்லுாரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்ட நிர்வாகமும், மருத்துவக் கல்லுாரி நிர்வாகமும் இந்த பிரச்னையில் தலையிட்டு அடிக்கடி பழுதாகும் பழைய எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரத்தை மாற்றிவிட்டு புதிய இயந்திரம் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.