/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பாசன கால்வாயில் கோழிக்கழிவுகள் நோய் பரவும் அபாயம் பாசன கால்வாயில் கோழிக்கழிவுகள் நோய் பரவும் அபாயம்
பாசன கால்வாயில் கோழிக்கழிவுகள் நோய் பரவும் அபாயம்
பாசன கால்வாயில் கோழிக்கழிவுகள் நோய் பரவும் அபாயம்
பாசன கால்வாயில் கோழிக்கழிவுகள் நோய் பரவும் அபாயம்
ADDED : ஜூலை 15, 2024 04:46 AM

சிங்கம்புணரி : சிங்கம்புணரி தாலுகா அலுவலகம் அருகே செல்லும் பாசன கால்வாயில் கோழி கழிவுகள், குப்பைகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இப்பேரூராட்சியை ஒட்டிய அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் தாலுகா அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகம் அருகே உப்பாறு அணை மற்றும் பெரியாறு நீட்டிப்பு கால்வாய்களை இணைக்கும் விதமாக கட்டப்பட்ட பாசன கால்வாய் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இக்கால்வாயில் அப்பகுதியில் உள்ள சில கோழிக் கடைகள் கோழிக்கழிவுகளை கொட்டி, கழிவு நீரை திறந்து விட்டுள்ளனர். மேலும் அப்பகுதி மக்கள் இக்கால்வாயில் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.
இதனால் அவ்வழியாக தாலுகா அலுவலகம் செல்லும் மக்கள் துர்நாற்றம் காரணமாக மூக்கை பிடிக்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே கால்வாயை தூர்வாரி கழிவுகளை கொட்டாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.