ADDED : ஆக 05, 2024 07:16 AM

மானாமதுரை : மானாமதுரை அருகே கல்லுக்கோட்டை முனியாண்டி கோயிலில் ஆடி அமாவாசை மற்றும் பொங்கல் விழா நடைபெற்றது.
நேற்று அதிகாலை சுவாமிக்கு திருமஞ்சனம் நடந்தது. விரதமிருந்த பக்தர்கள் மூங்கில் ஊருணி விநாயகர் கோயிலில் இருந்து பூஜை பொருட்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
சுவாமிக்கு அபிேஷக, ஆராதனைகள் நடந்தது. விழா கமிட்டியினர் ஏற்பாட்டை செய்திருந்தனர்.