Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ அபுதாபியில் இறந்த கணவர் உடலை மீட்டுத்தர மனு  

அபுதாபியில் இறந்த கணவர் உடலை மீட்டுத்தர மனு  

அபுதாபியில் இறந்த கணவர் உடலை மீட்டுத்தர மனு  

அபுதாபியில் இறந்த கணவர் உடலை மீட்டுத்தர மனு  

ADDED : ஜூலை 13, 2024 07:20 AM


Google News
Latest Tamil News
சிவகங்கை : திருப்புவனம் சலுப்பனோடையைச் சேர்ந்தவர் பாண்டி. மனைவி பஞ்சவர்ணம். 4 பெண் குழந்தைகள் உள்ளனர். 2018ல் அபுதாபியில் கம்பி கட்டும் வேலைக்கு சென்றார். அங்கு வாங்கிய சம்பளம் அவரது செலவிற்கு மட்டுமே போதுமானதாக இருந்துள்ளது.6 ஆண்டுகளாக வீட்டிற்கு பணம் அனுப்ப முடியாமல் தவித்தார்.

இந்நிலையில் பாண்டி மனைவி பஞ்சவர்ணம் அலைபேசிக்கு ஜூலை 10 ம் தேதி அழைப்பு வந்துள்ளது. அதில், அபுதாபியில் இருந்து பேசுவதாகவும், அன்று மாலை 6:30 மணிக்கு பாண்டி இறந்துவிட்டதாகவும், அவரது உடலை பெற்றுக்கொள்ளுமாறு சக ஊழியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அதிர்ச்சியான பஞ்சவர்ணம், சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித்திடம், அபுதாபியில் இறந்த தனது கணவரின் உடலை மீட்டு, சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தார். கலெக்டரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us