/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
ADDED : ஜூன் 14, 2024 05:00 AM
காரைக்குடி: காரைக்குடி நகராட்சி அலுவலகத்தை சூடாமணிபுரம் பகுதி மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
காரைக்குடி சூடாமணிபுரம் பகுதிக்குட்பட்ட பாண்டி கோவில் தெரு, வேலுநாச்சியார் தெரு உட்பட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள், தங்களுக்கு பட்டா வழங்கக்கோரி கோரிக்கை விடுத்து வருகின்றனர். இப்பகுதி ஆக்கிரமிப்பு பகுதி என கூறி அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் தயாராகினர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் காரைக்குடி நகராட்சி அலுவலக வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சேர்மன் முத்துத்துரை, தாசில்தார் தங்கமணியிடம் அப்பகுதி மக்கள், பல்வேறு கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தினர். கலெக்டர் ஆஷா அஜித்தை சந்தித்து இப்பிரச்னை குறித்து விளக்கம் அளித்தனர். அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர்.