ADDED : ஜூன் 24, 2024 11:53 PM
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே கோபாலபுரம் கிராம மக்கள் சார்பில் கலியுக மெய் அய்யனார் சங்கிலி கருப்பர் கோயிலுக்கு புரவி எடுப்பு நடந்தது.
பிரான்மலை பாப்பாபட்டி புரவி பொட்டலில் வைத்து 2 பெரிய புரவிகள்மற்றும் நேர்த்திக்கடன் பரவிகள் செய்யப்பட்டது. ஜூன் 16ல் காப்பு கட்டப்பட்டு ஜூன் 23ம் தேதி சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. அங்கிருந்து கலியுக மெய் அய்யனார் கோயிலுக்கு ஊர்வலமாக புரவிகள் எடுத்து வரப்பட்டது. கோபாலபுரம்கிராமத்தின் சார்பில் அன்னதானம் நடந்தது.