ADDED : ஜூலை 19, 2024 11:56 PM
சிவகங்கை : சிவகங்கை அருகே அழகு மெய்ஞானபுரம் செல்வ விநாயகர் கோயிலில் ரூ.8 லட்சத்தில் கட்டிய கலையரங்கத்தை கார்த்தி எம்.பி., திறந்து வைத்தார்.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் ராமசாமி, ஒன்றிய கவுன்சிலர் கோவிந்தன், காங்., முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரத்தினம், மகளிர் காங்., துணை தலைவி ஸ்ரீவித்யா கணபதி உட்பட கோயில் நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.