/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சாலைக்கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு சாலைக்கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு
சாலைக்கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு
சாலைக்கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு
சாலைக்கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு
ADDED : ஜூலை 29, 2024 12:08 AM

சாலைக்கிராமம் : சாலைக்கிராமத்தில் ரூ.1.25 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்பட்டது.
இந்த கட்டடத்தை நேற்று முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். மாவட்ட சுகாதார அலுவலர் விஜய்சந்திரன் வரவேற்றார். அமைச்சர் பெரியகருப்பன், தமிழரசி எம்.எல்.ஏ., இளையான்குடி தாசில்தார் முருகன், ஊராட்சி ஒன்றிய தலைவர் முனியாண்டி, ஒன்றிய கவுன்சிலர் செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர். வட்டார மருத்துவ அலுவலர் ஆரோன் அரவிந்த் ரெஜிஸ் நன்றி கூறினார்.