ADDED : ஜூன் 05, 2024 12:14 AM
சிவகங்கை : மதுரை மாவட்டம் கம்பூர் பகுதியை சேர்ந்தவர் சிங்கராசு 40. இவர் காளையார்கோவிலில் உள்ள தோப்பில் கடந்த 3 வருடமாக மாங்காய் பறிக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் தோட்டத்தில் குளித்துவிட்டு துணியை அங்கு கட்டியிருந்த கம்பியில் காயப்போட்டுள்ளார். கம்பி மரத்தில் கட்டியிருந்ததால் மரத்தில் மின்சார வயர் உரசியதில் சிங்கராசு மீது மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார்.
அருகில் இருந்தவர்கள் சிங்கராசுவை மீட்டு காளையார்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர். டாக்டர் பரிசோதித்ததில் சிங்கராசு இறந்ததாக தெரிவித்தார். காளையார்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.