/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பணியில் சேர்ந்த இரண்டே நாளில் டாக்டர் மாற்றம் மானாமதுரை மருத்துவமனையில் கர்ப்பிணிகள் அவதி பணியில் சேர்ந்த இரண்டே நாளில் டாக்டர் மாற்றம் மானாமதுரை மருத்துவமனையில் கர்ப்பிணிகள் அவதி
பணியில் சேர்ந்த இரண்டே நாளில் டாக்டர் மாற்றம் மானாமதுரை மருத்துவமனையில் கர்ப்பிணிகள் அவதி
பணியில் சேர்ந்த இரண்டே நாளில் டாக்டர் மாற்றம் மானாமதுரை மருத்துவமனையில் கர்ப்பிணிகள் அவதி
பணியில் சேர்ந்த இரண்டே நாளில் டாக்டர் மாற்றம் மானாமதுரை மருத்துவமனையில் கர்ப்பிணிகள் அவதி
ADDED : ஜூலை 10, 2024 04:14 AM
மானாமதுரை : மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு பணிக்கு வந்த மகப்பேறு டாக்டர் 2 நாட்களிலேயே வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதால் கர்ப்பிணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் 800க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாகவும், 50க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இம்மருத்துவமனைக்கு மானாமதுரை சுற்று வட்டார கிராமங்களைச்ச சேர்ந்த கர்ப்பிணிகள் பிரசவத்திற்காக வந்து செல்கின்றனர். இம்மருத்துவமனையில் மகப்பேறு டாக்டர் மற்றும் மயக்கவியல் டாக்டர் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் பணியிடம் காலியாக இருப்பதால் கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இம் மருத்துவமனையில் 12க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால் பல டாக்டர்கள் பணியிடம் காலியாக இருப்பதால் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதில்லை.
பல மாதங்களாக மகப்பேறு டாக்டர் பணியிடம் காலியாக இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மகப்பேறு டாக்டர் ஒருவர் இம்மருத்துவமனைக்கு பணிக்கு வந்தார். 2 நாட்கள் பணி செய்த நிலையில் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.இதனால் மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த கர்ப்பிணிகள் சிகிச்சை பெற முடியவில்லை.
மானாமதுரை அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:
மானாமதுரை அரசு மருத்துவமனையில் மகப்பேறு டாக்டர் மற்றும் மயக்கவியல் டாக்டர் மற்றும் சிறப்பு மருத்துவர்கள், ஸ்கேன் எடுப்பவர் உள்ளிட்ட பணியிடம் காலியாக இருப்பது குறித்து மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் மாற்றுப் பணியில் சென்ற மகப்பேறு டாக்டர் மீண்டும் மானாமதுரைக்கு மாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவித்தனர்.