Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ஓ.சிறுவயல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேசிய தரச்சான்று

ஓ.சிறுவயல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேசிய தரச்சான்று

ஓ.சிறுவயல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேசிய தரச்சான்று

ஓ.சிறுவயல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேசிய தரச்சான்று

ADDED : ஜூலை 13, 2024 07:09 AM


Google News
Latest Tamil News
காரைக்குடி : காரைக்குடி அருகே உள்ள ஓ.சிறுவயல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேசிய தரச்சான்று வழங்கப்பட்டதற்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

சாக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓ.சிறுவயல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் 250க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்கு, தேசிய தரச் சான்று குழுவினர் சுகாதார நிலையத்தில் உள்ள அடிப்படை வசதிகள், கட்டமைப்பு, மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் செயல்பாடு, மருத்துவ பதிவேடு பராமரிப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.

டாக்டர். மின்னிமோல், டாக்டர். சுரேந்திரநாத் ஆன்டி தலைமையில் இந்த ஆய்வு நடந்தது. இந்த ஆய்வில், தர நிர்ணய மருத்துவர் முத்துக்குமார், தர நிர்ணய ஆலோசகர் லட்சுமி வட்டார மருத்துவ அலுவலர் ஆனந்தராஜ் மற்றும் மருத்துவர்கள் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து ஓ. சிறுவயல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 86.9 சதவீத மதிப்பெண்ணுடன் தேசிய தரச்சான்று அளிக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் ஆஷா அஜித், சிவகங்கை மாவட்ட சுகாதார அலுவர் விஜயசந்திரன் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் பணியாளர்கள் பொதுமக்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us