/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பராமரிப்பும் இல்லை... பாதுகாப்பும் இல்லை; அங்கன்வாடி நிலையால் பெற்றோர் அச்சம் பராமரிப்பும் இல்லை... பாதுகாப்பும் இல்லை; அங்கன்வாடி நிலையால் பெற்றோர் அச்சம்
பராமரிப்பும் இல்லை... பாதுகாப்பும் இல்லை; அங்கன்வாடி நிலையால் பெற்றோர் அச்சம்
பராமரிப்பும் இல்லை... பாதுகாப்பும் இல்லை; அங்கன்வாடி நிலையால் பெற்றோர் அச்சம்
பராமரிப்பும் இல்லை... பாதுகாப்பும் இல்லை; அங்கன்வாடி நிலையால் பெற்றோர் அச்சம்
ADDED : மார் 12, 2025 01:01 AM

காரைக்குடி; காரைக்குடி முத்தாலம்மன் கோயில் அருகேயுள்ள அங்கன்வாடி மையம் பாதுகாப்பு இல்லாமலும், பராமரிப்பு இல்லாததாலும் பெற்றோர்கள் குழந்தைகளை அனுப்ப தயக்கம் காட்டுகின்றனர்.
சாக்கோட்டை யூனியனில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், காரைக்குடி முத்தாலம்மன் கோயில் அருகே அங்கன்வாடி மையம் செயல் பட்டு வருகிறது. அதிக எண்ணிக்கை இருந்த நிலையில் தற்போது குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கட்டடத்தின் வாயிலில் குடிநீர் பள்ளம் பாதுகாப்பின்றி காணப்படுகிறது. தவிர குழந்தைகள் பயன்படுத்தும் கழிப்பறை கதவுகள் உடைந்து பாதுகாப்பின்றி கிடக்கிறது.
பெற்றோர்கள் கூறுகையில்: பல நாட்கள் அங்கன்வாடி மையம் பூட்டப்படாமல் திறந்தே கிடக்கிறது. தவிர அருகிலுள்ள கடைக்காரர்கள் அங்கன்வாடியை திறந்து மூடுகின்றனர். அங்கன்வாடி படி அருகில் எப்போதும் மது பாட்டில்கள் குவிந்து கிடக்கிறது. குழந்தைகளை அனுப்புவதற்கே அச்சமாக உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திட்ட அலுவலர் மாரியப்பன் கூறுகையில்: இதுவரை புகார் எதுவும் வரவில்லை.
சம்மந்தப்பட்ட அங்கன்வாடி குறித்து நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.