/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ நம்ம ஊரு நம்ம பள்ளி திட்ட செயல்பாடு; கலெக்டர் ஆஷா அஜித் தகவல் நம்ம ஊரு நம்ம பள்ளி திட்ட செயல்பாடு; கலெக்டர் ஆஷா அஜித் தகவல்
நம்ம ஊரு நம்ம பள்ளி திட்ட செயல்பாடு; கலெக்டர் ஆஷா அஜித் தகவல்
நம்ம ஊரு நம்ம பள்ளி திட்ட செயல்பாடு; கலெக்டர் ஆஷா அஜித் தகவல்
நம்ம ஊரு நம்ம பள்ளி திட்ட செயல்பாடு; கலெக்டர் ஆஷா அஜித் தகவல்
ADDED : ஜூலை 19, 2024 06:24 AM
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் அரசு பள்ளிகளை மேம்படுத்த தனியார் பங்களிப்புடன் 'நம்ம ஊரு நம்ம பள்ளி' திட்டம் செயல்படுத்தப்படுவதாக கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த, சமூக, தனியார் பங்களிப்பு திட்டம் மூலம் பொருள், பணம், களப்பணி மூலம் மேம்படுத்தப்பட உள்ளது.
இதன் மூலம் சிறு, குறு, நடுத்தர, பெரு நிறுவனங்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், முன்னாள் மாணவர்களின் சமூக நிதியினை கொண்டு மேம்படுத்த முடியும்.
'
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் படிப்பு, உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான உதவிகளை பணமாகவோ, லேப்டாப் வழங்கி நிறைவேற்றலாம்.
ஒவ்வொரு பள்ளிகளின் தேவைகளையும் அந்தந்த பள்ளி மேலாண்மை குழு, தலைமை ஆசிரியரால் உறுதி செய்யப்பட்ட என்.எஸ்.என்.ஓ.பி., தளத்தில் பதிவேற்றப்படும். பங்களிப்பாளர்களுக்கு சான்று, வரிவிலக்கு மற்றும் பாராட்டு சான்று வழங்கப்படும். இதற்கென கலெக்டர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை திட்ட மேலாண்மை குழு நிர்வாகிகள் லுாக் அஸ்லாஸ்கன், அனுஷா, ஜனனி, ேஹமந்த் ஆகியோர் பங்கேற்றனர்.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளிகளுக்கு உதவுவதற்கான விபரம் அறிய 95003 49916ல் தொடர்பு கொள்ளலாம்.