Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ந.வைரவன்பட்டி பிரமோத்ஸவம் நாளை தேரோட்டம்

ந.வைரவன்பட்டி பிரமோத்ஸவம் நாளை தேரோட்டம்

ந.வைரவன்பட்டி பிரமோத்ஸவம் நாளை தேரோட்டம்

ந.வைரவன்பட்டி பிரமோத்ஸவம் நாளை தேரோட்டம்

ADDED : ஆக 05, 2024 10:03 PM


Google News
Latest Tamil News
திருப்புத்துார், - திருப்புத்துார் அருகே ந.வைரவன்பட்டியில் வளரொளிநாதர், வயிரவசுவாமி கோயிலில் பிரமோத்ஸவத்தை முன்னிட்டு நாளை வயிரவருக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் கோயிலான இங்கு ஆடி பிரமோத்ஸவம் வயிரவர் சுவாமிக்கு பதினொரு நாட்கள் நடைபெறும். ஜூலை 30ல் கொடியேற்றி காப்புக்கட்டி உத்ஸவம் துவங்கியது. தினசரி காலையில் வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடும், இரவில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெறும். இன்று இரவில் குதிரை வாகனத்தில் உற்ஸவ வயிரவர் திருவீதி வலம் வருகிறார்.

நாளை காலை 9:00 மணிக்கு வயிரவர் தேரில் எழுந்தருளலும், மாலை 4:00 மணிக்கு வடம் பிடித்தலும் நடைபெறும். ஆக.8 இரவில் பூப்பல்லக்கில் வீதி உலா நடைபெறும். ஆக. 9 காலை 9:15 மணிக்கு பஞ்சமூர்த்திகள், வயிரவருக்கு மகா அபிேஷகம், இரவு 6:00 மணிக்கு திருக்கல்யாணம், இரவு 7:00 மணிக்கு திருவீதி உலா நடைபெறும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us