ADDED : ஆக 05, 2024 10:21 PM
சிவகங்கை, - தாய்பாலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக உலக தாய்ப்பால் வார விழா ஆக.,7 வரை அரசு சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கொண்டாடப்படுகிறது.
முதல்வர் சத்தியபாமா தலைமை வகித்தார்.குழந்தைகள் நலப்பிரிவு துறைத் தலைவர் சிவக்குமார்,இணை பேராசிரியர் பால சுப்பிரமணியன், மகப்பேறு நலப்பிரிவு இணைப் பேராசிரியர் நாகசுதா, தென்னரசி தாய்ப்பாலின் அவசியம் குறித்து பேசினர்.
கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி, கோலம் வரைதல், தாய்ப்பால் விழிப்புணர்வு ஓவியம் வரைதல் உள்ளிட்ட நிகழ்ச்சி நடந்தது.மருத்துவக் கல்லுாரி துணை முதல்வர் விசாலாட்சி, நிலைய மருத்துவர் மகேந்திரன், துணை நிலைய மருத்துவர்கள் முகமது ரபீக், தென்றல் கலந்து கொண்டனர். பேராசிரியர் வனிதா நன்றி கூறினார்.