ADDED : மார் 12, 2025 12:57 AM

காரைக்குடி; மாத்துார் பெரியநாயகி அம்பிகை உடனுறை ஐநூற்றீஸ்வரர் கோயில் மாசி பிரம்மோற்சவ விழா மார்ச் 3 ஆம் தேதி விழா, கணபதி ஹோமம், கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சுவாமி, ரிஷப, அன்ன, சிம்மம், கிளி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று காலை தேருக்கு சுவாமி எழுந்தருளால் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தேரோட்டம் மாலையில் நடந்தது. இன்று இரவு 8:00 மணிக்கு சப்தாவரணம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை மாத்துார் நகரத்தார்கள் செய்திருந்தனர்.