/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மார்க்கண்டேயன்பட்டி மஞ்சுவிரட்டு 200 காளைகள் பங்கேற்பு மார்க்கண்டேயன்பட்டி மஞ்சுவிரட்டு 200 காளைகள் பங்கேற்பு
மார்க்கண்டேயன்பட்டி மஞ்சுவிரட்டு 200 காளைகள் பங்கேற்பு
மார்க்கண்டேயன்பட்டி மஞ்சுவிரட்டு 200 காளைகள் பங்கேற்பு
மார்க்கண்டேயன்பட்டி மஞ்சுவிரட்டு 200 காளைகள் பங்கேற்பு
ADDED : ஜூன் 14, 2024 04:57 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் மார்கண்டேயன்பட்டியில் நடந்த மஞ்சுவிரட்டில் 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
மார்க்கண்டேயன்பட்டியில் பூமலச்சி அம்மன், பெரிய கருப்பர், சின்ன கருப்பர் கோவில் திருவிழாவை முன்னிட்டு பாரம்பரியமாக மஞ்சுவிரட்டு நடைபெறும்.
நேற்று காலை 10:00 மணிக்கு கிராமத்தினர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்திய பின்னர் ஊர்வலமாக தொழுவிற்கு வந்தனர். தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட காளைகள் தொழுவிலிருந்து அவிழ்க்கப்பட்டன. வயல்களில் கட்டுமாடுகளும் அவிழ்க்கப்பட்டன.
சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, காரைக்குடி, பொன்னமராவதி, சிங்கம்புணரி பகுதிகளிலிருந்து வந்த காளைகள் பங்கேற்றன. வேகமாக வந்த காளைகளை பிடிப்பதற்கு மாடு பிடி வீரர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் குறைந்த அளவிலான காளைகளே பிடிபட்டன. ஒருவர் மட்டுமே காயம் அடைந்தார்.வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன. அனுமதியில்லாமல் மஞ்சுவிரட்டு நடத்தியதாக 5 பேர் மீது கண்டவராயன்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.