/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ குடும்ப தகராறில் மைத்துனரை கொலை செய்தவருக்கு 'ஆயுள்' குடும்ப தகராறில் மைத்துனரை கொலை செய்தவருக்கு 'ஆயுள்'
குடும்ப தகராறில் மைத்துனரை கொலை செய்தவருக்கு 'ஆயுள்'
குடும்ப தகராறில் மைத்துனரை கொலை செய்தவருக்கு 'ஆயுள்'
குடும்ப தகராறில் மைத்துனரை கொலை செய்தவருக்கு 'ஆயுள்'
ADDED : ஜூன் 11, 2024 08:00 PM

சிவகங்கை:மதுரை மாவட்டம் மேலுார் அருகேயுள்ள கொட்டாம்பட்டியைச் சேர்ந்தவர் பசுபதி, 50, பெயின்டர். இவரது மனைவி தமிழரசி. பசுபதிக்கு குடி பழக்கம் இருந்ததால் கணவன், மனைவி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது.
பசுபதியும் தமிழரசியும் பிரிந்து வாழ்ந்தனர். சிவகங்கை மாவட்டம், சொக்கையன் பட்டியில் தன் அம்மா வீட்டில் தமிழரசி இருந்தார். 2017 மார்ச் 12ல், சொக்கையன்பட்டிக்குச் சென்ற பசுபதி, தமிழரசி சகோதரர் பாண்டியிடமும் அவரது அப்பாவிடமும் தமிழரசியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு தகராறு செய்துள்ளார்.
தமிழரசியின் பெற்றோர் பசுபதியுடன் அவரை அனுப்பி வைக்க மறுத்துள்ளனர். ஆத்திரமடைந்த பசுபதி அன்று இரவு 11:00 மணிக்கு போதையில் சொக்கையன்பட்டியில் துாங்கிக் கொண்டிருந்த தன் மைத்துனர் பாண்டி மீது கல்லை போட்டு கொலை செய்தார்.
பூவந்தி போலீசார் பசுபதியை கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சொர்ணம் நடராஜன், வழக்கை விசாரித்து, பசுபதிக்கு ஆயுள் தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அரசு தரப்பில் வழக்கறிஞர் அழகர்சாமி ஆஜரானார்.