ADDED : ஜூன் 22, 2024 05:15 AM
காரைக்குடி: காரைக்குடி ராஜராஜன் சி.பி.எஸ்.சி., பள்ளியில் பிளஸ் 1 படித்து வருபவர் மெய்யம்மை 16.
அமெரிக்காவில் உள்ள குரல் கூடல் செம்மொழி அறக்கட்டளை சார்பில் சயின்ஸ் எக்ஸ்போ நடந்தது. இதில் தமிழகத்திலிருந்து 20 பள்ளிகள் கலந்து கொண்டன. 116 சயின்ஸ் ப்ராஜக்ட் இடம்பெற்றது.
இதில், மாணவி மெய்யம்மை ஹியூமன் ஆட்டோமேஷன் கண்ட்ரோல் ரோபோட் என்ற ப்ராஜெக்ட் சமர்ப்பித்தார். இவரது ப்ராஜெக்ட் முதலிடம் பிடித்ததோடு, இலவசமாக நாசா செல்லும் வாய்ப்பையும் பெற்றார்.
அதன் மூலம் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இன்டெர்ன்ஷிப் பயிற்சி பெற்றார். மாணவியை முன்னாள் அழகப்பா பல்கலை துணைவேந்தர் சுப்பையா மற்றும் பள்ளி முதல்வர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பாராட்டினர்.