ADDED : ஜூன் 04, 2024 05:33 AM

திருப்புத்துார் : திருப்புத்துாரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி 101 வது பிறந்தநாளை தி.மு.க.,வினர் கொண்டாடினர்.
திருப்புத்துார் பஸ் ஸ்டாண்ட் அருகில் கருணாநிதி படம் வைக்கப்பட்டு நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். ஒன்றிய செயலாளரும், திருப்புத்தூர் ஒன்றிய தலைவருமான சண்முக வடிவேல் தலைமை வகித்தார். பொதுமக்கள், பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நகரச் செயலாளர் கார்த்திகேயன், பேரூராட்சி தலைவர் கோகிலாராணி நாராயணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
* இளையான்குடி_வடக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் என்.புக்குளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அமைச்சர் பெரியகருப்பன் மரக்கன்றுகளை நட்டார். மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன், இளையான்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் மதியரசன், கண்ணமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் தமிழரசன் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் காளிமுத்து,தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கண்ணன், நிர்வாகிகள் சிவனேசன், முத்துராமலிங்கம், முருகேசன், நீலமேகம் கலந்து கொண்டனர்.