/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ அவர் எப்போதும் இதுபோன்று தான் பேசுவார் இளங்கோவனுக்கு பதிலடி கொடுத்த கார்த்தி அவர் எப்போதும் இதுபோன்று தான் பேசுவார் இளங்கோவனுக்கு பதிலடி கொடுத்த கார்த்தி
அவர் எப்போதும் இதுபோன்று தான் பேசுவார் இளங்கோவனுக்கு பதிலடி கொடுத்த கார்த்தி
அவர் எப்போதும் இதுபோன்று தான் பேசுவார் இளங்கோவனுக்கு பதிலடி கொடுத்த கார்த்தி
அவர் எப்போதும் இதுபோன்று தான் பேசுவார் இளங்கோவனுக்கு பதிலடி கொடுத்த கார்த்தி
ADDED : ஜூலை 28, 2024 03:06 AM
காரைக்குடி:''அவர் எப்போதும் இதுபோன்று தான் வாடிக்கையாக பேசுவார். அதை நான் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை,'' என, காரைக்குடியில் காங்., எம்.எல்.ஏ., இளங்கோவன் விமர்சனத்துக்கு கார்த்தி எம்.பி., பதிலடி கொடுத்துள்ளார்.
சிவகங்கையில் நடந்த காங்., கூட்டத்தில் கார்த்தி எம்.பி., பேசுகையில், ''மக்கள் பிரச்னைகளை தைரியமாக சொல்ல வேண்டும். கூட்டணி தர்மம் என்பதற்காக கூனி குறுகி நிற்க கூடாது. 2026 சட்டசபை தேர்தல் காங்., முக்கியமான தேர்தல். அப்போது அமையும் தமிழக அமைச்சரவையில் காங்., எம்.எல்.ஏ.,க்கள் இடம் பெற வேண்டும்,'' என, தி.மு.க.,வை மறைமுகமாக சாடினார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்., எம்.எல்.ஏ., இளங்கோவன், ''லோக்சபா தேர்தலில் தி.மு.க., இல்லாவிட்டால் கார்த்தி டெபாசிட் கூட வாங்கி இருக்க மாட்டார்,'' என விமர்சித்தார். இது இரு தரப்புக்கு இடையே மோதலை சூழ்நிலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இளங்கோவனுக்கு பதிலடி தரும் வகையில் காரைக்குடியில் கார்த்தி எம்.பி., நேற்று கூறியதாவது: புதுக்கோட்டையில் ஜூலை 19, சிவகங்கையில் 20 ல் நடந்த காங்., கூட்டத்தில் நான் பேசினேன். இதற்கு எதற்காக ஜூலை 26 இளங்கோவன் பேட்டி தருகிறார் என தெரியவில்லை.
நான் பேசியதை அவர் கேட்ட பிறகு தற்போது பேட்டி கொடுத்தாரா என தெரியவில்லை. அவர் எப்போதும் இதுபோன்று வாடிக்கையாக பேசுவார். எனவே அதை நான் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை.
நான் பேசும் போது மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், சட்டசபை கட்சித் தலைவர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் இருந்தனர். அவர்களுக்கு வராத சந்தேகம், காங்.,ல் எல்லோருக்கும் வராத எதிர்ப்பு, இளங்கோவனுக்கு மட்டும் எப்படி ஒரு வாரம் கழித்து வரும். இது வேடிக்கையாக விசித்திரமாக உள்ளது.
நான் பேசியதை முதலில் அவர் முழுமையாக கேட்க வேண்டும். எங்கள் கட்சி தொண்டர்களுக்கு முன் நான் பேசிய அனைத்தும் எங்களுடைய கட்சி வளர்ச்சிக்காக தான். இது தொண்டர்களை எப்படி பாதிக்கும்.
காங்., கட்சி வலுவாக இருக்க வேண்டும். காங்., கட்சிக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்று கூறினால் அதுஎப்படி கட்சியை பாதிக்கும். கூட்டணி கட்சிகள் பலமாக இருந்தால் தான் கூட்டணியும் பலமாக இருக்கும்.
இந்தியா கூட்டணி சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் அதில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் பலமாக இருக்க வேண்டும்.
என் பேச்சுக்கு அனைவரும் ஆதரவு தெரிவிக்கின்றனர். இளங்கோவன் சொல்வது மட்டுமே காங்., கருத்து அல்ல. அவரைப் பற்றி நான் எந்த விமர்சனமும் செய்ய விரும்பவில்லை என்றார்.