/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் ஜூன் 21 ல் ஆனி தேரோட்ட விழா போலீஸ் குவிப்பு கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் ஜூன் 21 ல் ஆனி தேரோட்ட விழா போலீஸ் குவிப்பு
கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் ஜூன் 21 ல் ஆனி தேரோட்ட விழா போலீஸ் குவிப்பு
கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் ஜூன் 21 ல் ஆனி தேரோட்ட விழா போலீஸ் குவிப்பு
கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் ஜூன் 21 ல் ஆனி தேரோட்ட விழா போலீஸ் குவிப்பு
ADDED : ஜூன் 18, 2024 07:06 AM
தேவகோட்டை : கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோவில் ஆனித்திருவிழா நான்கு நாட்களாக நடைபெற்று வருகிறது. தினமும் இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது.
ஆனி திருவிழா தேரோட்டம் ஜூன் 21ல் நடக்கிறது. தேர் வடம் பிடிப்பது தொடர்பாக கருத்து வேறுபாடுகள் இருந்து வரும்நிலையில் சமாதான கூட்டத்தில் அனைவரும் ஒற்றுமையாக தேர் வடம் பிடித்து இழுப்பது என முடிவு செய்துள்ளனர்.
வெள்ளோட்டம் அதிகாலையில் போலீஸ் பாதுகாப்புடன் சமஸ்தான ஊழியர்கள் இழுத்தனர். 18 ஆண்டுக்கு பின் திருவிழா தேரோட்டம் நடக்க உள்ளது. சுவாமி தேரில் எழுந்தருள்வார்.
நான்கு நாட்டுக்கு மரியாதை செலுத்திய பின், அனைத்து தரப்பினரும் தேர் வடம் பிடித்து இழுக்க உள்ளனர். பாதுகாப்பு காரணமாக கண்டதேவியில் மணிமுத்தாறு, ராஜபாளையம், பட்டாலியனை சேர்ந்த போலீசார், சிவகங்கை ஆயுதப்படை போலீசார் 500 க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போலீசார் ராம்நகர், சிறுவாச்சி, ஆறாவயல் விலக்கு உட்பட பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோயிலை சுற்றி 26 இடங்களில் நிரந்தரமாக சி.சி.டி.வி,., கேமராக்கள் பொருத்தியுள்ளனர். நடமாடும் வாகனத்தில் சுழலும் கேமராவும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.
வழக்கமாக மாலையில் தான் தேரோட்டம் நடக்கும். இந்த ஆண்டு காலையில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கான நேரம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கின்றனர்.