Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ தாசில்தார் அலுவலகங்களில் ஜமாபந்தி கூட்டம் துவக்கம்

தாசில்தார் அலுவலகங்களில் ஜமாபந்தி கூட்டம் துவக்கம்

தாசில்தார் அலுவலகங்களில் ஜமாபந்தி கூட்டம் துவக்கம்

தாசில்தார் அலுவலகங்களில் ஜமாபந்தி கூட்டம் துவக்கம்

ADDED : ஜூன் 19, 2024 05:01 AM


Google News
சிவகங்கை : மாவட்டத்தில் அனைத்து தாசில்தார்அலுவலகங்களில் 1433 பசலிக்கான ஜமாபந்திகூட்டம் நேற்று தொடங்கியது.

திருப்புவனத்தில் கலெக்டர் ஆஷா அஜித், காரைக்குடியில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், திருப்புத்துாரில் கோட்டாட்சியர் பால்துரை, சிவகங்கை கலெக்டர் பி.ஏ., (நிலம்) சரவண பெருமாள், மானாமதுரையில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சிவக்குமார், இளையான்குடியில் கோட்டாட்சியர் விஜயகுமார், காளையார்கோவில் உதவி கமிஷனர் (ஆயம்) ரங்கநாதன், தேவகோட்டை பிற்பட்டோர் நல அலுவலர் ஜெயமணி, சிங்கம்புணரி மாவட்ட வழங்கல் அலுவலர் சபிதாள் பேகம் தலைமையில் நடைபெற்றது. அந்தந்த பிர்க்கா வாரியாக கிராம கணக்குகளை ஆய்வு செய்தனர்.மேலும், பட்டா கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைக்காக பொதுமக்கள் மனு அளித்தனர். திருப்புத்துாரில் தாசில்தார் மாணிக்கவாசகம், தனி தாசில்தார் (சமூக பாதுகாப்பு திட்டம்) கண்ணதான், கோட்டாட்சியரின் பி.ஏ., சாந்தி, மண்டல துணை தாசில்தார் நேரு பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us