/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ விலைப்பட்டியல் கண்காணிப்பு குழு ஆலோசனை கூட்டம் விலைப்பட்டியல் கண்காணிப்பு குழு ஆலோசனை கூட்டம்
விலைப்பட்டியல் கண்காணிப்பு குழு ஆலோசனை கூட்டம்
விலைப்பட்டியல் கண்காணிப்பு குழு ஆலோசனை கூட்டம்
விலைப்பட்டியல் கண்காணிப்பு குழு ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூன் 11, 2024 11:02 PM
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட வர்த்தக நிறுவனங்களில் விலை பட்டியல் கட்டாயம் இருப்பதை கண்காணிப்பு குழு உறுதி செய்ய வேண்டும் என சிவகங்கையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வர்த்தக நிறுவனங்களில் விலைப்பட்டியல் கண்காணிப்பு குழு ஆலோசனை கூட்டம் நடந்தது. குழு தலைவர் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனசந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட வழங்கல் அலுவலர் சுபைதாள் பேகம், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் அருண்பிரசாத், கூட்டுறவு துணை பதிவாளர் (வழங்கல்) குழந்தைவேலு, நிர்வாகி பகீரத நாச்சியப்பன் பங்கேற்றனர்.
கூட்டத்தில் வர்த்தக நிறுவனங்களில் பொருட்களின் விலை பட்டியல் கட்டாயம் எழுதி இருக்க வேண்டும். அவை முறையாக எழுதப்பட்டுள்ளதா என்பதை கண்காணிப்பு குழு ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இக்கண்காணிப்பு குழு வர்த்தக நிறுவனங்களில் ஆய்வு செய்து, விலைப்பட்டியல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.