Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு அதிகரிப்பு   

கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு அதிகரிப்பு   

கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு அதிகரிப்பு   

கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு அதிகரிப்பு   

ADDED : ஜூலை 27, 2024 05:36 AM


Google News
Latest Tamil News
படம் உண்டு சிவகங்கை, ஜூலை 27-தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் தொடர்ந்து பல ஆண்டாக செயலர்கள் ஒரே இடத்தில் பணிபுரிவதால், முறைகேடு அதிகரித்து விட்டதாக, சிவகங்கையில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

சிவகங்கையில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடந்தது. வேளாண்மை இணை இயக்குனர் லட்சுமிபிரபா வரவேற்றார். கோட்டாட்சியர்கள் சிவகங்கை விஜயகுமார், தேவகோட்டை பால்துரை முன்னிலை வகித்தனர்.கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத் உட்பட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் நடந்த விவாதம்: * அய்யாச்சாமி, கீழநெட்டூர்: மாவட்டத்தில் உள்ள 125 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் பல ஆண்டாக ஒரே இடத்தில் செயலர்கள் பணிபுரிகின்றனர். இதனால், முறைகேடு அதிகரித்து வருகின்றன. செயலர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். * ராஜேந்திர பிரசாத், இணை பதிவாளர்: மாவட்ட அளவில் 54 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் மட்டுமே செயலர் உள்ளனர். மற்ற சங்கங்களை கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகின்றனர். இவர்களை மாற்றுவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த விவசாய குறைதீர் கூட்டத்திற்குள் வங்கி செயலர்கள் இடமாற்றம் செய்யப்படுவர். * போஸ், புல்லுக்கோட்டை: கடந்த 2023 ‛டாப்செட்கோ' மூலம் மின் இணைப்பு கோரி 90 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் பலருக்கு இன்னும் மானியம் கிடைக்கவில்லை. * அய்யாச்சாமி, இளையான்குடி: ஆலம்பச்சேரி முதல் திருவேங்கடம் வரையிலான மாநில சாலையை புதுப்பித்து தர வேண்டும். * கன்னியப்பன், லட்சுமிபுரம்: இளையான்குடி மத்திய கூட்டுறவு வங்கி கிளைக்கு இடம் ஒதுக்கி, புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும். * கிருஷ்ணன், மானாமதுரை: பரமக்குடியில் இருந்து மதுரைக்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். மேலும், தாயமங்கலம் முதல் மானாமதுரைக்கு காலை நேரத்தில் பள்ளி மாணவர்களுக்கென கூடுதல் டவுன் பஸ் இயக்க வேண்டும். * கலெக்டர் ஆஷா அஜீத்: மாவட்ட அளவில் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் ரோட்டோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. 3 மாதத்திற்கு ஒரு முறை ஆக்கிரமிப்பு அகற்றி அந்தந்த கமிஷனர், செயலர்கள் எனக்கு அறிக்கை வழங்க வேண்டும். * சந்திரன், சிவகங்கை: பெரியாறு அணை பாசன நீர், சிவகங்கையில் உள்ள 2,800 எக்டேர் நிலங்களுக்கான பாசனத்திற்கு மேலுாரில் இருந்து தண்ணீர் திறப்பதே இல்லை. * ராமலிங்கம், தமறாக்கி : விருதுநகர் மாவட்டம், அழகாபுரி தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ், சிவகங்கையில் எஸ்.வாகைக்குளம், அருணகிரி கிராம விவசாயிகள் உறுப்பினராக இருந்தனர். அந்த சங்கத்தை கலைத்துவிட்டனர். இதனால், இவ்விரு கிராம விவசாயிகளை பழையனுார் கூட்டுறவு வங்கியுடன் சேர்க்க வேண்டும். * சேங்கைமாறன், திருப்புவனம்: திருப்புவனம் அருகே காஞ்சிரங்குளம் கண்மாய்க்கு, கடந்த 2 ஆண்டாக வைகை அணை தண்ணீர் வரவே இல்லை. மாவட்ட நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது. ///





      Our Apps Available On




      Dinamalar

      Follow us