ADDED : மார் 14, 2025 07:26 AM
சிவகங்கை, மார்ச் 14-சிவகங்கையில் தமிழ்சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. தலைவர் அன்புத்துரை தலைமை வகித்தார்.
பகீரத நாச்சியப்பன், நல்லாசிரியர் கண்ணப்பன், தமிழ்சங்க நிறுவன தலைவர் ஜவஹர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் யுவராஜ் வரவேற்றார். சங்க செயலாளர் மாலா ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் பால்ராஜ் வரவு செலவு அறிக்கை வாசித்தார். புதிய தலைவராக முருகானந்தம், செயலாளர் பாண்டியராஜன், பொருளாளர் ஜெயச்சந்திரன், துணை தலைவர் முத்துக்கிருஷ்ணன், துணை செயலாளர் இந்திராகாந்தி பதவியேற்றனர். நகராட்சி தலைவர் துரைஆனந்த், காங்., நிர்வாகி சுந்தரராஜன், மலைராம் ஓட்டல் உரிமையாளர் பாண்டிவேல், வள்ளலார் அருட்சபை போசானந்தம் மகராஜ் வாழ்த்துரை வழங்கினர். செயலாளர் பாண்டியராஜன் நன்றி கூறினார். ///