/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மஞ்சுவிரட்டு அனுமதி உயர்நீதிமன்றம் உத்தரவு மஞ்சுவிரட்டு அனுமதி உயர்நீதிமன்றம் உத்தரவு
மஞ்சுவிரட்டு அனுமதி உயர்நீதிமன்றம் உத்தரவு
மஞ்சுவிரட்டு அனுமதி உயர்நீதிமன்றம் உத்தரவு
மஞ்சுவிரட்டு அனுமதி உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜூலை 13, 2024 04:23 AM
மதுரை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பொய்யலுார் சரவணன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: மஞ்சுவிரட்டு நடத்துவதற்கான அரசிதழில் பொய்யலுாரை சேர்க்க வேண்டும். கோயில் ஆடித் திருவிழாவையொட்டி ஜூலை 24 ல் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதியளிக்க வேண்டும் என கலெக்டருக்கு மனு அனுப்பினோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு: கலெக்டர் ஜூலை 22 க்குள் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதன் விபரத்தை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.