/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பிரான்மலையில் மூலிகை சாகுபடி மையம் விவசாயிகள் எதிர்பார்ப்பு பிரான்மலையில் மூலிகை சாகுபடி மையம் விவசாயிகள் எதிர்பார்ப்பு
பிரான்மலையில் மூலிகை சாகுபடி மையம் விவசாயிகள் எதிர்பார்ப்பு
பிரான்மலையில் மூலிகை சாகுபடி மையம் விவசாயிகள் எதிர்பார்ப்பு
பிரான்மலையில் மூலிகை சாகுபடி மையம் விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 10, 2024 04:42 AM
பிரான்மலை : சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் மூலிகை சாகுபடி மையம் அமைக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பாரி ஆண்ட பறம்புமலை என்று அழைக்கப்படும் இம்மலையிலும், அருகேயுள்ள எஸ்.புதூர் ஒன்றியத்திலும் ஏராளமான மூலிகை தாவரங்கள் இயற்கையாகவே வளர்கின்றன. இப்பகுதி மக்கள் விவசாயம் அல்லாத நேரங்களில் இம்மூலிகைச் செடிகளையும், செடிகளில் விளையும் மூலிகைப் பொருட்களையும் பறித்து மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு விற்கின்றனர். இதற்காக சிங்கம்புணரியில் தனியார் கொள்முதல் மையங்களும் செயல்படுகிறது.
மூலிகை மருந்துகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளதை தொடர்ந்து இப்பகுதி மூலிகைச் செடிகளின் விற்பனையும் அதிகரித்துள்ளது. பெரும்பாலான மூலிகைச் செடிகளுக்கு பெரிய அளவில் தண்ணீர் தேவையில்லை. அனைத்தும் இயற்கையாகவே வளரக்கூடியது. விவசாயம் பொய்த்து நஷ்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு இந்த மூலிகை செடிகளை வளர்த்து பராமரிக்க ஏற்பாடு செய்தால் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
எனவே பிரான்மலையில் அரசு சார்பில் மூலிகை மையம் ஒன்றை அமைத்து, அங்கு மூலிகைச் செடிகளை வளர்த்து பராமரிக்கவும், பொதுமக்களிடம் மூலிகைச்செடிகளை கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.