ADDED : ஜூன் 19, 2024 05:00 AM

காரைக்குடி : சிவகங்கை மாவட்டத்தில் நேற்று பரவலாக அனைத்து பகுதியிலும் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
குறிப்பாக காரைக்குடியில் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சிவகங்கையில் 20 நிமிடம் மழை பெய்தது. தொடர் மழைக்கு சில நிமிடம் மின்வெட்டு ஏற்பட்டது. காரைக்குடியில் பெய்த பலத்த மழைக்கு கல்லுாரி ரோடு, செக்காலை ரோடு உள்ளிட்ட பகுதி ரோட்டில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.