/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பட்டதாரி ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு: ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு: ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்
பட்டதாரி ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு: ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்
பட்டதாரி ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு: ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்
பட்டதாரி ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு: ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 07, 2024 11:39 PM
சிவகங்கை: உயர்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்களை, பதவி உயர்வு மூலம் தலைமை ஆசிரியர்களாக நியமிக்கவேண்டும் என தமிழ்நாடு உயர், மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் சேதுசெல்வம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்த வேண்டும். உயர்கல்வி தகுதிக்கு இரண்டு சம்பள உயர்வு வழங்க வேண்டும்.
ஈட்டிய விடுப்பை அமல்படுத்த வேண்டும். உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு, அங்கு பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களையே நியமிக்கவேண்டும். ஒவ்வொரு உயர், மேல்நிலை பள்ளிக்கும் தலா 7 பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இக்கோரிக்கை உட்பட 14 அம்ச கோரிக்கையை நிறைவேற்றித்தரக்கோரி அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம், என்றார்.