ADDED : ஜூன் 16, 2024 02:02 AM
காரைக்குடி:சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கல்லூரி சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியே பைக்கில் வந்த நாச்சியார்புரத்தைச் சேர்ந்த தமிழரசனை 54, நிறுத்தி சோதனை செய்தனர். பைக்கில் ரூ.6 லட்சம் இருந்துள்ளது.
போலீசார் விசாரித்த போது வெளிநாட்டில் உள்ள தனது நண்பர் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்ட ஹவாலா பணம் என்பது தெரிய வந்தது. பணத்தை பறிமுதல் செய்த போலீசார் தமிழரசனிடம் விசாரிக்கின்றனர்.