ADDED : ஜூலை 23, 2024 05:21 AM
காரைக்குடி: காரைக்குடி அருகே கோட்டையூரில் உள்ள குபேர சாய்பாபா கோயிலில் குருபூர்ணிமாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், ஆராதனை நடைபெற்றது. சிறப்பு பூஜைக்கு பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலையில் தில்லைஆச்சியின் வீணைஇசை, பேராசிரியர் சங்கரய்யரின் சாய்பஜனையும் நடைபெற்றது. பஜன் ஏற்பாடுகளை சுந்தரராமன் செய்திருந்தார்.
கானல் கண் மருத்துவமனை டாக்டர் கிருஷ்ணன் வரவேற்றார். மதுரை அப்போலோ டாக்டர் அழகப்பன் நன்றி கூறினார்.