ADDED : ஜூலை 07, 2024 11:34 PM
இளையான்குடி: இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வழிகாட்டும் பயிற்சி நடந்தது.
சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் சபினுல்லாகான் வரவேற்றார். ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லாகான் தலைமை வகித்தார்.
ஆட்சிக்குழு உறுப்பினர் ஹமீத் தாவூத், பி.எட்., கல்லூரி முதல்வர் முகம்மது முஸ்தபா வாழ்த்துரை வழங்கினார். தங்கம்மாள் ரஹீம் அறக்கட்டளை நிறுவனர் முகம்மது அலி ஜின்னா நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முதல்வர் ஜபருல்லாகான், விவேகானந்தா வித்யாலயா பள்ளி முதல்வர் தீனதயாளன், துறை தலைவர்கள் ஷர்மிளா பானு, அப்துல் ரஹீம், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் நசீர் கான், உஸ்மான் அலி, அப்துல் சலீம், அபூபக்கர் சித்திக், சீராஜுதீன் ஆகியோர் பங்கேற்றனர்.