ADDED : ஆக 05, 2024 10:25 PM
மானாமதுரை, - தமிழ்நாடு தொலைத்தொடர்பு கணக்கு மற்றும் நிதிப்பிரிவு அதிகாரிகள் நல அறக்கட்டளையின் சார்பில் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கும் விழா அல்லிநகரம்,பெரியகோட்டை, மல்லல் மற்றும் பாகனேரியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்றது.
விழாவில், அறக்கட்டளை அறங்காவலர் பி.எஸ்.என்.எல்., முன்னாள் துணைப் பொது மேலாளர் ராமகிருஷ்ணன் மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழை வழங்கினார் . ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோ.முத்துக்குமரன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.