ADDED : ஜூன் 24, 2024 11:44 PM
காரைக்குடி : காரைக்குடியில் நமது உரிமை பாதுகாப்பு இயக்கம் மற்றும் ஜி.டி. என்., இயற்கை, யோகா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை சார்பில் பாரத் வித்யாலயா பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
முகாமில் மூச்சுப் பயிற்சி, யோகா பயிற்சி சூரிய ஒளி படுதல் பயிற்சி உட்பட பல்வேறு பயிற்சி வழங்கப்பட்டது. டாக்டர்கள் ஜெகன் சுபா மற்றும் நவீன் பிரசாத் மருத்துவ ஆலோசனை வழங்கினர். நமது உரிமை பாதுகாப்பு இயக்க நிறுவன தலைவர் பிரகாஷ் வரவேற்றார்.
பழனியப்பன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.