/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கீழடியில் தந்த ஆட்டக்காய் கண்டெடுப்பு கீழடியில் தந்த ஆட்டக்காய் கண்டெடுப்பு
கீழடியில் தந்த ஆட்டக்காய் கண்டெடுப்பு
கீழடியில் தந்த ஆட்டக்காய் கண்டெடுப்பு
கீழடியில் தந்த ஆட்டக்காய் கண்டெடுப்பு
ADDED : ஜூலை 13, 2024 10:18 PM

கீழடி:சிவகங்கை மாவட்டம் கீழடி 10ம் கட்ட அகழாய்வில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட ஆட்டக்காய் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் 10ம் கட்ட அகழாய்வு ஜூன் 18ல் தொடங்கியது. இதுவரை இரு குழிகள் மட்டும் தோண்டப்பட்டதில் பாசிகள், கண்ணாடி மணிகள், தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு, மீன் உருவம் பதிக்கப்பட்ட பானை ஓடுகள், சுடுமண் பானைகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டன. தற்போது யானை தந்தத்தால் செய்யப்பட்ட ஆட்டக்காய் கண்டறியப்பட்டுள்ளது. ஆட்டக்காயின் மேற்பகுதி 1.3 செ.மீ., விட்டமும், கீழ்பகுதி 1.5 செ.மீ., விட்டமும், 1.3 செ.மீ., உயரமும் கொண்டதாக உள்ளது.
தமிழக தொல்லியல் துறை சார்பில் கீழடியில் நடந்த அகழாய்வில் இதுவரை ஐந்து ஆட்டக்காய்கள் பல்வேறு கட்ட அகழாய்வில் கிடைத்துள்ளன. ஆட்டக்காய்கள் அனைத்துமே யானைத் தந்தத்தால் ஒரே மாதிரியான தோற்றத்தில் உள்ளன. எனவே இவை அனைத்தும் ஒரே கால கட்டத்தை சேர்ந்தவையாக இருக்கலாம் என கருதப்படுகிறது. ஆட்டக்காயின் காலத்தை அறிய கார்பன் டேட்டிங் முறை பயன்படுத்த தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது. கீழடியில் அகழாய்வு பணிகளில் கீழடி தள இயக்குனர் ரமேஷ், இணை இயக்குனர் அஜய் தலைமையில் தொல்லியல் துறை மாணவர்கள், கூலி தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.