சிவகங்கை: மதகுபட்டி அருகே ஆலவிளாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜாமணி. இவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சுபாதி 23 என்பவரை திருமணம் செய்துள்ளார்.
மறுநாளே ராஜாமணி, சுபாதி தங்கையையும் திருமணம் செய்துள்ளார். இதில் சுபாதிக்கும் ராஜாமணிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சுபாதி, கணவர் ராஜாமணியை பிரிந்து தனது அம்மா வீட்டில் வசித்து வந்தார்.
நேற்று ராஜாமணி, சுபாதி அம்மா வீட்டிற்கு சென்று சுபாதியை தன்னுடன் அனுப்பி வைக்க கேட்டு பிரச்னை செய்துள்ளார். இதில் மனம் உடைந்த சுபாதி அவரது அம்மா வீட்டில் துாக்கிட்டு இறந்தார். மதகுபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.