Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ காய்ந்து வரும் தென்னை மரங்கள் பாதுகாக்க விவசாயிகள் முயற்சி

காய்ந்து வரும் தென்னை மரங்கள் பாதுகாக்க விவசாயிகள் முயற்சி

காய்ந்து வரும் தென்னை மரங்கள் பாதுகாக்க விவசாயிகள் முயற்சி

காய்ந்து வரும் தென்னை மரங்கள் பாதுகாக்க விவசாயிகள் முயற்சி

ADDED : ஜூன் 03, 2024 03:07 AM


Google News
Latest Tamil News
திருப்புவனம்: திருப்புவனம் வட்டாரத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் தென்னை மரங்கள் காய்ந்து போவதை தடுக்க விவசாயிகள் மரத்தின் அடியில் தென்னை, தேங்காய் மட்டைகள் வைத்து பாதுகாக்க தொடங்கியுள்ளனர்.

திருப்புவனம், திருப்பாச்சேத்தி, லாடனேந்தல், மடப்புரம் பகுதிகளில் சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான தென்னை மரங்கள் உள்ளன.

வைகை ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் பெரும்பாலும் மோட்டார் பம்ப்செட் கிணறு வசதியுடன் தென்னந்தோப்புகள் உள்ளன. தென்னை மரங்களுக்கு தினசரி தண்ணீர் பாய்ச்ச வேண்டும் அப்போது தான் விளைச்சல் அதிகரிக்கும், மேலும் வேர்ப்பகுதி ஈரப்பதத்துடன் இருந்தால்தான் மரங்களில் காய்களின் விளைச்சல் அதிகரிக்கும், 45 முதல் 60 நாட்களுக்கு ஒரு முறை தேங்காய் அறுவடை நடைபெறும், தென்னை மரங்களுக்கு போதிய அளவு தண்ணீர் பாய்ச்சாவிட்டால் விளைச்சல் பாதிக்கப்படும்.

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையவே இல்லை. அதிலும் திருப்புவனம் வட்டாரத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. தென்னை மரங்களுக்கு எவ்வளவுதான் தண்ணீர் பாய்ச்சினாலும் வேர்கள் விரைவில் உறிஞ்சி விடுகின்றன.

வெயில் காரணமாக தண்ணீரும் ஆவியாகி விடுகிறது. இதனை தவிர்க்க விவசாயிகள் பலரும் தென்னை மரங்களுக்கு அடியில் தென்னை மற்றும் தேங்காய் மட்டைகளை வைத்து வேர்ப்பகுதியை மறைத்து வருகின்றனர்.

இதன் மூலம் வேர்ப்பகுதியில்தண்ணீர் பாய்ச்சினால் நீண்ட நேரம் தண்ணீர் ஆவியாகாமல் உள்ளது. மட்டைகளில் ஈரம் தொடர்ந்து இருப்பதால் வேர்ப்பகுதியின் கீழே தண்ணீர் தேங்கிய வண்ணம் உள்ளது. இதனால் தண்ணீர் பாய்ச்சும் நேரமும் குறைந்து தண்ணீரின் பயன்பாடும் குறைந்து வருகிறது.

விவசாயிகள் கூறியதாவது: தென்னை மரங்களுக்கு தண்ணீரின் தேவை அதிகம், ஒரே ஒரு மோட்டாரை வைத்து சுமார் 2000 மரங்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும், வெயில் காரணமாக தண்ணீர் ஆவியாகி விடுவதால் மரங்களின் காய்ப்பு தன்மை குறைந்து விட்டது. எனவே தென்னை மரங்களின் வேர்ப்பகுதியில் இதுபோன்று மட்டைகளை வைத்து நிழல் உருவாக்கியுள்ளோம், இதன் மூலம் தண்ணீரின் பயன்பாடு சிறிது குறைந்துள்ளது, என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us