Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பாலக்காடு-திருச்சி ரயில் காரைக்குடி வரை நீட்டிப்பு

பாலக்காடு-திருச்சி ரயில் காரைக்குடி வரை நீட்டிப்பு

பாலக்காடு-திருச்சி ரயில் காரைக்குடி வரை நீட்டிப்பு

பாலக்காடு-திருச்சி ரயில் காரைக்குடி வரை நீட்டிப்பு

ADDED : ஜூன் 14, 2024 10:25 PM


Google News
காரைக்குடி: கோவை-திருப்பூர் வழியாக வரும் பாலக்காடு -திருச்சி ரயிலை காரைக்குடி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என தொழில் வணிக கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

தொழில் வணிகக் கழகத் தலைவர் சாமி திராவிட மணி கூறியதாவது:

காரைக்குடி மக்கள் சென்னை, மதுரைக்கு அடுத்தபடியாக தொழில் நிமித்தமாகவும், படிப்பிற்காகவும், வேலைக்காகவும், வாழ்வாதார வளர்ச்சிக்கும் கோயம்புத்துார், திருப்பூர், ஈரோடு சென்று வருகின்றனர்.

ஆனால் காரைக்குடி, தேவகோட்டை, அறந்தாங்கி, சிவகங்கை பகுதி மக்கள் மதுரை, கோயம்புத்தூர், திண்டுக்கல்செல்ல ரயில் பாதை இல்லாததால் சிரமம் அடைந்து வருகின்றனர்.

பாலக்காடு-திருச்சி ரயிலை காரைக்குடி வரை நீட்டிப்பு செய்ய வேண்டுமென பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். பாலக்காட்டில் இருந்து காலை 6:30க்கு புறப்பட்டு கோவைக்கு 8:10க்கும், திருச்சிக்கு மதியம் 1:50-க்கும் வரும்.

இந்த முன்பதிவு இல்லா எக்ஸ்பிரஸ் ரயில் காரைக்குடி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். அவ்வாறு, நீட்டிப்பு செய்தால் காரைக்குடிக்கு மாலை 4:00 மணிக்கு வரும். இந்த வண்டியின் பெட்டிகளை காரைக்குடியில் இருந்து மாலை 6:00 மணிக்கு திருவாரூர் புறப்பட்டு செல்லும் வண்டியில் மாற்றி அனுப்பலாம். மீண்டும் திருவாரூரில் இருந்து காலை 6:20 மணிக்கு புறப்பட்டு காரைக்குடிக்கு காலை 9:30 வந்து சேரும்.

ரயில் பெட்டிகளை மாற்றி காலை 11:00 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு மதியம் 1:00 மணிக்கு வழக்கம் போல் கோவை பாலக்காடு புறப்பட்டு செல்லும் படியாக நேரம் அட்டவணையாக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us