/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மானாமதுரையில் காலாவதி குளிர்பானம் பறிமுதல் மானாமதுரையில் காலாவதி குளிர்பானம் பறிமுதல்
மானாமதுரையில் காலாவதி குளிர்பானம் பறிமுதல்
மானாமதுரையில் காலாவதி குளிர்பானம் பறிமுதல்
மானாமதுரையில் காலாவதி குளிர்பானம் பறிமுதல்
ADDED : ஆக 05, 2024 07:15 AM
மானாமதுரை : மானாமதுரை புது பஸ் ஸ்டாண்ட் அருகே சர்வீஸ் ரோட்டில் உள்ள ஒரு பேக்கரியில் காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் குழந்தைகள் உண்ணக்கூடிய உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு வந்த தகவலை அடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணகுமார் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
அங்கு காலாவதியான குளிர்பானம், குழந்தைகள் உணவு பண்டங்களை பறிமுதல் செய்தனர். காலாவதி உணவு பொருட்கள் விற்ற கடைகளுக்கு தலா ரூ.3000 வரை அபராதம் விதித்தனர்.