ADDED : ஜூன் 06, 2024 06:07 AM

சிவகங்கை, : காளையார்கோவிலில்தமிழ்நாடு அறிவியல்இயக்கம் சார்பாக மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில்உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கருத்தரங்கம் நடந்தது.
மாவட்டத் துணைத் தலைவர் சேவற்கொடியோன் தலைமை வகித்தார். துணை முதல்வர் கவிக்குயில், மாவட்ட பொருளாளர் பிரபு, வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஆலிஸ்மேரி, பொன்னி முன்னிலை வகித்தனர். கிளைச் செயலாளர் அலெக்சாண்டர் துரை வரவேற்றார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் ஆரோக்கியசாமி சுற்றுச்சூழல் தினம் குறித்து பேசினார். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் பொறுப்பு மனோன்மணி கலந்துகொண்டார். விரிவுரையாளர் சியாமளா நன்றி கூறினார்.